ஓசூர் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம்.
ஓசூர் : Er. பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய செஞ்சிலுவை சங்கம், காவேரிப்பட்டினம் துணை கிளை மற்றும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சார்பில் முதலுதவி பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவன தலைவர் திரு. பெருமாள் தலைமை வகித்தார், மற்றும் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் திருமதி. மலர் முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சியில் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் செயலாளர் திரு. குமார் பாலிடெக்னிக் இயக்குனர் திரு. சுதாகரன் மற்றும் முதல்வர் திரு. பாலசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினர்.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டணம் துணை கிளையின் தலைவரும், கிருஷ்ணகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனருமான Dr.G.அசோக்குமார் அவர்கள் 15 நாள் நடக்கக்கூடிய இந்த முதலுதவி பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.
IRCS பயிற்சியாளர்கள் திரு. M. பன்னீர்செல்வம்,
திரு. A ஜெகநாதன், திரு. J. ஆனந்த்,
திரு. K.பார்த்திபன்,
திரு. E. பிளைத் சுதர்.
திரு. செந்தில்குமார், ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பேருந்து விபத்துக்களில், இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி; நீரில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி? மாரடைப்பு, திடீர் மயக்கம் அடைந்தவர் களை, முதலுதவி சிகிச்சை அளித்து காப்பது எப்படி?, தீயில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
முகாமில் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. முகமது அப்பாஸ் செய்திருந்தார்.