ஓசூர். பி.எம்.சி டெக் கல்லூரியில்
72வது சுதந்திர தினவிழா
”சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை தியாகத்தை படிப்போம்”
ஓசூர். பி.எம்.சி டெக் இன்ஜினியர். பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் 72வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியாளர்.பி.பெருமாள் அவர்கள், தலைமையேற்று தேசியக்கொடியை ஏற்றி கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு தலைமையுரை ஆற்றுகையில் பழங்காலத்தில் மக்கள் இயற்கையோடு வாழ்ந்தார்கள், நேசித்தார்கள், வளர்த்தார்கள் இதை காலப்போக்கில் இந்தியாவில் எற்பட்ட போரில் அழிக்கப்பட்டது சூறையாடப்பட்டது. இன்றளவிலும் வளங்கள் அழிந்துவருகின்றன. இந்நிலைகளை மாணவர்களாகிய நீங்கள் மாற்ற வேண்டும், அதேபோல் சுதந்திரப் போரட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை தியாகத்தை படித்து நாட்டை நேசித்து ஒரு வளமிக்க நாடக்க இன்றைய தினம் உறுதியேர்ப்போம் என்று கூறினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நாட்றம்பள்ளி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி தியாகராஜானந்தா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் செயலாளர் திரு. பி.குமார் அவர்கள், உரையாற்றுகையில் “நம் நாட்டின் சுதந்திரத்தை மதித்து நாளைய தலைவர்களாகிய நீங்கள் தன்னை பல்துறைகளில் வளர்த்துக்கொண்டு நாம் சார்ந்துள்ள சமுகத்தையும் இந்தியாவின் பெருமைகளையும் வளர்க்கவேண்டும்” என்று கூறினார்.
இவ்விழாவில் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் திருமிகு. பி.மலர் அவர்கள், பாலிடெக்னிக் மற்றும் ஐ. டி . ஐ யின் இயக்குனர் திரு. என். சுதாகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ்.சித்ரா, பாலிடெக்னிக் முதல்வர். திரு.பாலசுப்பிரமணியம், ஐ.டி.ஐ முதல்வர் திரு.வி.பாபு, மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
72வது சுதந்திரதினக் கொண்டாட்டமாக மாணவர்களின் ஓவியகண்காட்சி, கோலப்போட்டி, நாட்டுப்புறக்கலைகள், கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அனைத்து துறைத்தலைவர்களும் பேராசிரியர்களும் மாணவர்களும் பெரும்திரளாக கலந்துகொண்டனர்.